கவுகாத்தியை அடுத்த பண்டு பகுதியில் வசிக்கும் மீனாக்ஷி அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் இலவச தற்காப்பு கலை குறித்த படிப்பை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதுமான பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு இது தன்னம்பிக்கையையும், தேவையேற்படும் நேரத்தில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளவும் உதவும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடத்திட்டத்தில் தற்காப்பு பயிற்சி - மோடிக்கு மாணவி கடிதம்! - மோடிக்கு மாணவி கடிதம்
கவுகாத்தி: நாடு முழுவதும் தற்காப்பு பயிற்சியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு 9 ஆம் வகுப்பு பள்ளிச்சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
student
வுஷூ தடகள வீரரான மாணவி மீனாக்ஷி, கடந்த ஓராண்டாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மாலிகான் பகுதியில் தன் ஆசிரியர் சிஜூ கோபிசிங் வழிகாட்டுதலில், சிறுமிகளுக்கு இலவசமாக தற்காப்பு பயிற்சியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மீனாக்ஷியின் தந்தையான மோனோஜித் சிங் கூறுகையில், இந்தியாவின் இளம் குடிமகளான தனது மகள் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி விரைவில் பதில் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மணிப்பூரில் நிலநடுக்கம்!