மேற்கு வங்கம் மாநிலம் தமோஹனி என்ற பகுதியில் இன்று(ஜன.13) மாலை ஐந்து மணி அளவில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அசாம் மாநிலம் கௌஹாத்தியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற கௌஹாத்தி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் வண்டியின் சுமார் ஆறு பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ அவுட்