தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை; மனைவி, மகள் படுகாயம்!

அமெரிக்காவில் வசித்துவரும் குஜராத்தை சேர்ந்த பினால் படேல் வீட்டில் புகுந்து திருடர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார், அவர் மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 23, 2023, 10:03 PM IST

வதோதரா (குஜராத்): ஆனந்த் அருகே உள்ள கரம்சாத் பகுதியை சேர்ந்த பினால் படேல் 2003 முதல் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து கடை நடத்தி வசித்து வந்தார். இவர் கடந்த ஜன.20 ம் தேதி மனைவி ரூபால் (50), மகள் பக்தி (17), ஆகியோருடன் வெளியூர் சென்றுள்ளார்.

அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். திருடர்களை வெளியே போகும்படி கூறிய பினால் படேல் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் மீது திருடர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பினால் படேல் மீது 10 குண்டுகள் துளைத்தன. ரூபல்பென் மற்றும் பக்தியும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகள் பக்தி தைரியமானவர். காயம் ஏற்பட்ட போதிலும் தனது ஸ்வெட்டரைக் கழற்றி, தந்தைக்கு குண்டு துளைத்த இடத்தில் ரத்தம் வெளியேறாமல் இருக்க கட்டியுள்ளார். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக பினால் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பக்தி தனது தாய் மாமா சஞ்சீவ் குமாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். தற்போது ரூபால்பென் மற்றும் பக்திக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருவரும் நலமாக உள்ளனர்.

இதையும் படிங்க: காதலுக்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாக்., இளம்பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details