தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் விழுந்த கார்... இருவர் உயிரிழப்பு... பாய் தூஜ் விழாவுக்குச்சென்றபோது சோகம்!

குஜராத்தில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பாய் தூஜ் விழாவுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

By

Published : Oct 28, 2022, 8:52 PM IST

Published : Oct 28, 2022, 8:52 PM IST

Gujarat
Gujarat

பஞ்ச்மஹால்(குஜராத்):குஜராத் மாநிலம், தாஹோட் மாவட்டத்தின் லிம்டி கிராமத்தைச்சேர்ந்த கோகர் அல்கேஷ், சுனில் திலிப் ஆகியோர் நேற்று(அக்.27) "பாய் தூஜ்" விழாவுக்காக டெலோச் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 70 அடி ஆழக் கிணற்றில் விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காரை மீட்க முயற்சித்தனர். ஆனால், மீட்க முடியவில்லை.

இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப்படைக்குத்தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவாகிவிட்டதால் நேற்று மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இன்று காலை மீட்புப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பல மணி நேரம் தேடியும் உடல்கள் கிடைக்காததால், கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, பின்னர் உடல்களை மீட்டனர். பாய் தூஜ் கொண்டாட்டத்திற்குச் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பாய் தூஜ்" என்பது சகோதர-சகோதரி பாசத்தை கொண்டாடும் விழா. இது வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் சகோதரர்களுக்காக சகோதரிகள் பூஜை செய்வர்.

இதையும் படிங்க:ஆசிரமத்துக்கு அருகிலிருந்து வயதான 2 பெண்களின் சடலங்கள் மீட்பு - போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details