தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாமனாரின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்..! - மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை

தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த மாமனாரின் கண்முன்னே மனைவியை கத்தியால் மருமகன் குத்திக் கொன்றார்.

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

By

Published : Oct 25, 2022, 9:22 PM IST

பாவ்நகர் (குஜராத்): குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள பாவ்நகரில் தீபாவளியன்று மாலை ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதை அடுத்து கணவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, மாமனாரையும் பலமாக தாக்கி தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஹிம்மத் டான்ஜி ஜோகாடியா மற்றும் தலைமறைவாக உள்ள மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாவ்நகரில் உள்ள இந்திராநகர் பகுதியில் உள்ள ஜோகாடியாவின் இல்லத்தில், அவரது மனைவி தீப்தியின் தந்தை பிரக்ஜிபாய், தீபாவளியை முன்னிட்டு அவருக்கு ஆபரணங்களை வழங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதில் ஜோகாடியா தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் தீப்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோகாடியா, தீப்தியின் தந்தையும் தலையில் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த பிரக்ஜிபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, வர்தேஜ் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்."இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, முழு வட்டாரமும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினர் நான்கு பேர் மீது புகார் அளித்துள்ளனர்" என்று டிஒய்எஸ்பி ஆர்ஆர் சிங்கால் கூறினார்.

மேலும், ஜோகாடியா மற்றும் தீப்தி இருவரும் அக்டோபர் 19, 2014 அன்று திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். தீப்தி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தனது கணவரின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் ஏழு ஆண்டுகளாக பெற்றோரின் வீட்டிற்கு கூட செல்லவில்லை என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கார் வெடித்த சம்பவம் குறித்து ஸ்டாலின் மெளனம் காப்பது ஏன்? - வானதி சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details