தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2021, 5:13 PM IST

ETV Bharat / bharat

போலி ரெம்டெசிவிர் விற்பனை: செய்த ஆறு பேர் கைது!

சூரத்: போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்பனை செய்ததாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

போலி ரெம்டெசிவிர்
போலி ரெம்டெசிவிர்

கரோனா பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டிற்கான உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரெம்டெசிவிர் சட்டவிரோதமாக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜுஹாபுராவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், 1,170 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளையும், ரூ.17 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றினர். மேலும் சூரத்தில் ஒருவரிடமிருந்து இந்த போலி மருந்து வாங்கப்பட்டதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 60 ஆயிரம் போலி மருந்துகளின் குப்பிகளை விற்க திட்டமிட்டிருந்தனர். அவற்றில் ஐந்தாயிரம் மருந்துகள் ஏற்கனவே விற்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details