தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Gujarat Election Results 2022: கோத்ராவில் முன்னிலை பெற்ற பாஜக - குஜராத் தேர்தல் முடிவுகள்

குஜராத் கலவரங்களால் பெரிதும் அறியப்பட்ட கோத்ரா தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

கோத்ராவில் முன்னிலை பெற்ற பாஜக
கோத்ராவில் முன்னிலை பெற்ற பாஜக

By

Published : Dec 8, 2022, 1:15 PM IST

கோத்ரா:பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான சி.கே.ரவுல்ஜி, 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், கோத்ரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ராஷ்மிதாபென் சவுகானைவிடவும் 25 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.

மதரீதியான பதற்றம் மிக்க இந்த தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2002 ல் நிகழ்ந்த இந்து முஸ்லிம் கலவரம், இந்திய பிரிவினைக்குப் பின் நிகழ்ந்த மோசமான கலவரமாக அறியப்படுகிறது.

பாஜக வேட்பாளரான ரவுல்ஜி கோத்ரா தொகுதியிலிருந்து கடந்த 2007ம் ஆண்டு முதலே எம்எல்ஏவாக தேர்வாகி வருகிறார். 2016ம் ஆண்டு வரையிலும் காங்கிரசில் இருந்த அவர், பாஜகவுக்கு தாவிய பின்னரும் எம்எல்ஏவாக தொடர்கிறார்.

கோத்ராவைப் பொருத்தவரையிலும் மதரீதியான அணுகுமுறைகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. மொத்தம் உள்ள சுமார் 2 லட்சத்து 79 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி மற்றும் அசாதுதின் ஓவைசி கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு கோத்ரா மாநகராட்சித் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களை கைப்பற்றி ஆச்சரியமளித்து. சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சாதனை மேல் சாதனை.. முன்னிலையால் குஷியான பாஜகவினர்...

ABOUT THE AUTHOR

...view details