தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 ஆண்டுகளுக்குப் பின் குஜராத் குண்டுவெடிப்பு குற்றவாளி காஷ்மீரில் கைது - gujarat ats

அகமதாபாத் கலுப்பூர் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான பிலால் அஸ்லாம் ஜம்மு காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத தடுப்புக் குழு, gujarat anti terrorism squad
gujarat anti terrorism squad

By

Published : Sep 30, 2021, 4:26 PM IST

அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள கலுப்பூர் ரயில் நிலையத்தில் 2006ஆம் ஆண்டு குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில், பிலால் அஸ்லாம் என்பவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நகரில் குஜராத்தின் பயங்கரவாத தடுப்புக் குழுவினரால் பிலால் அஸ்லாம் இன்று (செப். 30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இருவரையும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் உதவியுடன் பயங்கரவாத தடுப்புக் குழுவினர் கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'என் கணவரை 6 காவலர்கள் அடித்து கொன்றனர்'- ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி கண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details