ஆமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத். இங்கிருந்துதான் முதல் ரத யாத்திரை அரசியலை, அம்மண்ணின் மைந்தனும் பாஜகவின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவருமான லால் கிருஷ்ணன் அத்வானி, சோமநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ரத யாத்திரை நடைபெற்றது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல்:இதற்கிடையில் குஜராத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றியை தக்க வைக்கும் முனைப்பிலும், இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு தீனி போடும் வகையிலும் பாஜக மீண்டும் ரத யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த ரத யாத்திரையின் போது மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பேசப்படும். மேலும் மாநிலத்தின் இந்துத்துவ வாக்காளர்களையும் சரிகட்ட முடியும் என்று பாஜக எண்ணுகிறது. மறுபுறம் பஞ்சாப் வெற்றியால் உத்வேகம் பெற்றுள்ள ஆம் ஆத்மி திரங்கா யாத்திரை என்ற பெயரில் ரத யாத்திரையை குஜராத்தில் நடத்தவுள்ளது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ரத யாத்திரை: இந்த ரத யாத்திரை மாவட்டம், தாலுகா உள்ளிட்ட இடங்கள் மட்டுமின்றி கிராமங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்க உள்ளது. இந்த யாத்திரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அடுத்து 2022 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு காங்கிரஸஸூம் ரத யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரை காந்தி ஆசிரமத்தில் தொடங்கி டெல்லி ராஜ பாதையில் நிறைவுறுகிறது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்தத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த யாத்திரையின் கருப்பொருள், “கிராமங்கள் ஒருங்கிணைப்பு” என்பதே ஆகும்.
அரசியல் பிரமுகர் கருத்து: இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஜெயந்த் பாண்ட்யா, “மக்களை ஒன்றிணைக்கும் ஆன்மீக மற்றும் தேர்தல் பயணங்களை வெளிப்படுத்தும் பல யாத்திரைகளை குஜராத் கண்டுள்ளது” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “சோம்நாத்தில் இருந்து பாஜகவின் யாத்திரையில் எல்.கே.அத்வானி உள்பட பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர், இதன் விளைவாக அக்கட்சியின் ஆதரவு வலுப்பெற்றது.
குஜராத்தில் (மீ)ண்டும் ரத யாத்திரை.. அரசியல் நிபுணர் பதில் இந்தப் போக்கை அனைத்து கட்சிகளும் தற்போது பின்பற்றி வருகின்றன. இந்த யாத்திரை இப்போது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான இந்த சாகசம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் வேல் ரத யாத்திரை!