தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் - பாஜக அமோக வெற்றி - குஜராத்தில் பாஜக வெற்றி

குஜராத் மாநில மாநகராட்சித் தேர்தலில் பாஜக மூன்று மாநகராட்சிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

Bharatiya Janata Party
Bharatiya Janata Party

By

Published : Oct 5, 2021, 6:58 PM IST

Updated : Oct 5, 2021, 7:10 PM IST

குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் காந்திநகர், தாரா, ஓகா ஆகிய மூன்று நகராட்சிகளை பாஜக கைப்பற்றியது.

பன்வாத் நகராட்சியை மட்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. காந்திநகர் மாநகராட்சியில் இரு பிரதானக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஆம் ஆத்மி கடும் போட்டி தந்துள்ளது.

தேர்தல் ஆணைய புள்ளிவிவரப்படி, காந்திநகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 44 இடங்களில் 41 இடங்களை பாஜகவும், இரண்டு இடங்களை காங்கிரசும், ஒரு இடத்தை ஆம் ஆத்மியும் கைப்பற்றியுள்ளது.

தாரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 24 இடங்களில் 20 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரசுக்கு நான்கு இடங்களே கிடைத்தது. ஓகாவில் மொத்தமுள்ள 36 இடங்களில் 34 இடங்களை பாஜக வென்ற நிலையில், காங்கிரஸ் இடங்களை வென்றது.

பன்வாத்தில் மட்டும் காங்கிரஸ் பாஜகவை விட அதிக இடங்களை வென்றது. மொத்தமுள்ள 24 இடங்களில் 16 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், எட்டு இடங்களை பாஜக கைப்பற்றியது.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

முக்கியத்துவம் வாய்ந்த காந்திநகர் மாநகராட்சியில், 2016ஆம் ஆண்டு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் இருந்த நிலையில், இம்முறை பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.

பாஜகவின் இந்த வெற்றிக்கு கட்சித் தொண்டர்களை பாராட்டியும், குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தி கரங்களுக்கு வலு சேர்ப்பாரா சித்த ராமையா!

Last Updated : Oct 5, 2021, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details