டெல்லி: 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி (GST) தொகை விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று (ஜன.1) வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.1.64 லட்சம் கோடியாகும்.
அதில், சிஜிஎஸ்டி (CGST) மூலம் ரூ.30,443 கோடியும், எஸ்ஜிஎஸ்டி (SGST) மூலம் ரூ.37,935 கோடியும், ஐஜிஎஸ்டி (IGST) மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.14.97 லட்சம் கோடி ஆகும். அதாவது கடந்த ஆண்டை விட 12% கூடுதலாக கிடைத்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.13.40 லட்சம் கோடி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது.