தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அரசு சாட்டையை சுழற்றும் - பிரதமர் மோடி - மத்திய புலனாய்வு அமைப்பு

நாட்டை ஏமாற்றி ஊழல் செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அரசிடம் இருந்து தப்ப முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

By

Published : Oct 20, 2021, 5:41 PM IST

மத்திய புலனாய்வு அமைப்பு(CBI) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) ஆகிய இரு அமைப்புகளின் கூட்டு கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதாவது, "ஊழலின் அளவானது சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், அதன் தாக்கமானது பொது மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து, அதன் ஒட்டுமொத்த பலத்தை பெருமளவு பாதிக்கிறது. இன்றைய சூழலில், நாட்டை ஏமாற்றி, ஏழைகளிடம் திருடும் நபர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நாட்டில் பதுங்கினாலும் அவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்.

ஊழலைத் தடுப்பதில் முக்கிய பங்காக மக்கள் நலத் திட்டங்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக கொண்டு சேர்க்க அரசு வழிவகை செய்துள்ளது. இந்தியா இனி ஊழலை அங்கீகரிக்கப்போவதில்லை. வெளிப்படையான, சுமுகமான நிர்வாகத்தையே இந்தியா விரும்புகிறது" என்றார்.

இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம் - நூறு கோடி தடுப்பூசி இலக்கை நெருங்கும் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details