டெல்லி:குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் (PM CARES for children)திட்டம் கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம், 2020 மார்ச் 11ஆம் தேதி முதல், 2022 பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான கரோனா காலத்தில், கரோனா தொற்றால் பெற்றோர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தொடங்கப்பட்டது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி, உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது, அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பது, மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.