மும்பை: கிரிக்கெட் பிரபலங்கள் (சச்சின் டெண்டுல்கர்) தங்களுக்கு தெரியாத துறைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எச்சரித்திருந்த நிலையில் ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பாடகி ரிஹான்னா, நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் கருத்து தெரிவிக்க, டெல்லி விவசாய போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இச்சூழலில் இந்திய இறையாண்மை குறித்து கருத்து தெரிவித்த கருத்து தெரிவித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “இந்திய இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாட்டுக்காரர்கள் பார்வையாளராக இருங்கள், பங்கேற்பாளராக ஆசைப்படாதீர்கள். #IndiaTogether #IndiaAgainstPropaganda” எனப் பதில் கருத்து கூறினார். பிரபல பாடகி லதா மங்கேஸ்வரும் நாட்டுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை ட்விட்டர்வாசிகள் ட்ரோல் செய்துவருகின்றனர். அவரின் கருத்துக்கு எதிர்ப்பும்- ஆதரவும் ஒரே சேர எழுந்துள்ளது. இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சச்சின் டெண்டுல்கர் பெயரை உச்சரிக்காமல், தங்களுக்கு தெரியாத துறைகளில் கருத்து தெரிவிக்கும்போது கிரிக்கெட் பிரபலங்கள் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.