ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிக்கி(FICCI) அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசினார். அதில் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டம் குறித்து முக்கிய கருத்துக்களை கூறினார்.
அவர் பேசுகையில், "நாட்டின் 40 விழுக்காடு இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் பட்சத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 15 கோடி டன் குறையும். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி.
நாட்டின் வாகனத்துறையால் கார்பன் வாயு வெளியேறும் அளவை குறைக்க வேண்டிய முக்கியத் தேவை எழுந்துள்ளது. பொருளாதாரம், சூழலியல் என்ற பார்வையில் இந்நடவடிக்கை அவசியம் ஆகும்.