டெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "2022-23ஆம் ஆண்டில் நெல், சோளம் உள்ளிட்ட 14 வகை காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலையினை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்வு!
நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 100ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
paddy MSP
1,940 ரூபாயாக இருந்த நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2040 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. முதல் தர (ஏ) நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 120 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகம்மது நபி குறித்து அவதூறு; பாஜக பிரமுகர் கைது!