இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்க பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இவற்றை அவசர காலப் பயன்பாடாகவே அரசு பயன்படுத்திவரும் நிலையில், இரண்டு தடுப்பூசிகளுக்கும் சந்தைப் பயன்பாடு ஒப்புதல் வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட கோவிஷீல்டு டோஸ்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவை பாதுகாப்பானவை என்பது தற்போதைய நடைமுறையிலேயே நிரூபணமாகியுள்ளது. எனவே, இவற்றை சந்தைப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 159 கோடியே 71 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 92 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசி டோஸ்களும், 67 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:17 வயது இந்தியரை பிடித்து வைத்துக்கொண்ட சீன ராணுவம்