புதுச்சேரி - கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மருந்தகத்தில், மத்திய அரசு வழங்கிய ஏழு வென்டிலேட்டர்களை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்று, சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வழங்கினார்.
பின்னர், ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'மத்திய அரசு அனுப்பியுள்ள ஏழு வென்டிலேட்டர்கள், சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 17 வென்டிலெட்டர்களை மத்திய அரசு, புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் 350 வென்டிலெட்டர்களும், 1800 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன.
தினந்தோறும் 8000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், புதுச்சேரியில் அனைத்து மருந்துகளும் தேவையான அளவு உள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினால்தான், கரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது. இதில் மக்கள் பங்கு அதிகளவில் உள்ளது.