தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெங்கு விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

டெங்கு விழிப்புணர்வு பேரணி
டெங்கு விழிப்புணர்வு பேரணி

By

Published : Jul 16, 2021, 2:08 PM IST

புதுச்சேரி: மாநிலத்தில் தற்போது எட்டு நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (ஜூலை 16) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கொசுவால் டெங்கு பரவுகிறது என்பதை குறிக்கும் வகையில் கொசு வேடமணிந்து ஒருவர் பேரணியில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, " புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள், ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

டெங்கு விழிப்புணர்வு பேரணி

3ஆவது அலை முன்னெச்சரிக்கை

கரோனா 3ஆவது அலை வராது என்று நாம் கூற முடியாது. அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய கொடி ஏற்றும் போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சென்னை திரும்பினார்

ABOUT THE AUTHOR

...view details