புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளராக வெங்கடாஜலபதி செயல்பட்டு வருகிறார். இவர் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பொதிகை நகரில் வசித்து வருகிறார். இவரது தரப்பில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் தாகூர் கல்லூரி அருகே நடைபெற்ற விழாவிற்காக லாஸ்பேட்டை விமான சாலை உள்ளிட்ட சில இடங்களில் கட்சித் தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (பிப்.6) இரவு லாஸ்பேட்டை விமான சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதனை நேற்று (பிப்.7) காலை பார்த்த வெங்கடாஜலபதி, அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளார்.