மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இன்று அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் (மத்திய ஆயுத போலீஸ் படைகள்) மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸில் 10 சதவீத ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சிஏபிஎஃப் (CAPF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்புக்காக அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி மூன்று ஆண்டுகள் வயது தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.