டெல்லி :ரூபே கிரெடிட் கார்டு மூலம் கூகுள் பே செயலியில் யுபிஐ வசதிகளை பெற முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தேசிய கொடுப்பனவு நிறுவனம் என்று அழைக்கப்படும் நேஷனல் பேமமென்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை கூகுள் பே அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் பே, பேடிஎம், போன் பே, உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் மொபைல் வாலெட் செயலிகள் மூலம் யுபிஐ பேமென்ட் என்ற பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் மூலம் ஒருவரது வங்கி அல்லது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் பணம் அனுப்ப அல்லது பெறும் வசதியை பெற்று வருகிறோம்.
இதற்காக கூகுள் பே , பேடிஎம், போன் பே செயலிகளில் வங்கிக் கணக்கு எண் அல்லது டெபிட் கார்டுகளை இணைத்து அதன் மூலம் யுபிஐ ஐடி உருவாக்கி அதை வைத்து பரிவர்த்தணை செய்து வருகிறோம். இந்நிலையில், கிரெடிட் கார்டுகளை கொண்டு யுபிஐ பணப் பரிவர்த்தணைகளை மேற்கொள்ளும் வசதியை கூகுள் பே அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம், கூகுள் பே செயலியில் சாதாரணமாக வங்கிக் கணக்கு அல்லது டெபிட் கார்டு எண்களை கொண்டு யுபிஐ ஐடி உருவாக்குவது போன்று, ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து அதன் மூலம் யுபிஐ ஐடி உருவாக்கி பணப் பரிவர்த்தணைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பே நிறுவனம் முதல் கட்டமாக ரூபே கிரெடிட் கார்டுகளில் இந்த வசதியை வழங்கி வருகிறது. ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கிம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம் என கூகுள் பே தெரிவித்து உள்ளது.
தேவைப்படும் பயனர்கள் கூகுள் பே செயலியில் தங்களது ரூபே கிரேடிட் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம் என நிறுவனம் கூறியுள்ளது. யுபிஐ செயலியில் உள்ள ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்க தேவையான பூர்வங்களை பூர்த்தி செய்து, தங்களுக்கான முகப்பு பக்கத்தில் பயனர் இணைத்துக் கொள்ளலாம் என கூகுள் பே நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனை செயல்முறைக்கு என பயனர்கள் தனியாக கடவுச்சொல் உருவாக்க வேண்டும் என்றும் மற்ற பரிவர்த்தணைகளை போல் நாளொன்று ஒரு லட்ச ரூபாய் வரை பரிவர்த்தணை உச்சவரம்பு இருக்கும் என்றும் கூகுள் பே நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிய அப்டேட் கொடுக்கும் விதமாக இந்த நடமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 8 புள்ளி 7 பில்லியன் பரிவர்த்தணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆதேநேரம் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 125 புள்ளி 94 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான 74 பில்லியன் பரிவர்த்தணைகள் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பென்டகனில் வெடி விபத்தா? ட்விட்டரில் பரவிய புகைப்படத்தால் எலான் மஸ்குக்கு சிக்கலா?