தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Independence Day 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தைக் கவுரவித்த கூகுள் டூடுல்.! - ஜவுளிப் பாரம்பரியம்

Independence Day 2023: சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக இந்தியாவின் ஜவுளிப் பாரம்பரியத்தை கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 15, 2023, 11:06 AM IST

டெல்லி: இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டில் உள்ள ஜவுளிப் பாரம்பரியத்தை கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது. உலகின் மிகப்பெரும் இணையத் தேடுதல் நிறுவனமான கூகுள், உலகின் மிக முக்கிய தினங்களைக் கொண்டாடும் வகையில், அதை உலகெங்கும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் தனது டூடுல் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் பக்கத்தில் நாடு முழுவதும் உள்ள ஜவுளி கலாச்சாரத்தைப் பறைசாற்றியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கேரளா வரை அனைத்து மாநிலங்களின் நெய்த புடவைகளின் ஓவியம் டூடுலில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத்தின் கட்ச் எம்பிராய்டரி, ஒடிசாவின் பஷ்மினா கனி, ஜம்மு-காஷ்மீரின் கசவு புடவைகள் முதல் நெசவு செய்யப்பட்ட ஜவுளிகள் வரை அந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து கூகுள் போர்டலின் வரைகலை கலைஞர் குமார் கூறுகையில், இந்த டூடுலை உருவாக்க இந்தியாவின் கைத்தறி ஜவுளி பாரம்பரியம் குறித்து ஆராய்ந்தேன் என்றார். எம்பிராய்டரி, நெசவு பாணிகள், அச்சிடும் நுட்பங்கள், சாயமிடும் நுட்பங்கள், கைகளால் பிண்ணி உருவாக்கப்படும் ஜவுளிகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்க முயற்சித்தேன் எனவும், நாட்டின் பெருமையை ஜவுளி பாரம்பரியத்தோடு ஒப்பிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். மேலும், கடந்த 1947ஆம் ஆண்டு இதே நாள் (ஆகஸ்ட் 15) ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை கூகுள் கொண்டாடி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளது.

மேலும், கூகுள் வெளியிட்டுள்ள இந்த கலைப்படைப்பின் மூலம் இந்தியாவின் ஜவுளி மரபுகளின் செழுமையான கலாச்சாரமும், பாரம்பரியமும் அதனுடன் ஜவுளித் துறையில் கலை அறிவு உள்ளிட்ட அனைத்தும் உலக அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த டூடுல் வெளியிட்டுள்ள படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஜவுளிப் படைப்புகளும் நாட்டின் கைவினை கலைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், ஆடைகளுக்குச் சாயமிடுபவர்கள், அச்சிடுவோர், எம்பிராய்டரி செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்தியாவின் படைப்பாற்றலின் படைப்பாளர்களைக் கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மோடி மூவர்ணக் கோடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார். அதேபோல நாடு முழுவதும் உள்ள மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் பெருமையையும், சுதந்திரம் பெற்ற தினத்தையும் கவுரவித்துக் கொண்டாடும் வகையில் இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமைதியின் மூலம் மட்டுமே மணிப்பூரில் தீர்வு காண முடியும் - சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை!

ABOUT THE AUTHOR

...view details