தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் 53 பெட்டிகளுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்... போக்குவரத்து பாதிப்பு... - gaya bihar

பிகாரில் சரக்கு ரயிலின் பிரேக் பழுதானதால், 53 பெட்டிகளுடன் தடம் புரண்டது.

பீகாரில் 53 பெட்டிகளுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்
பீகாரில் 53 பெட்டிகளுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்

By

Published : Oct 26, 2022, 11:36 AM IST

பாட்னா: பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள குர்பா ரயில் நிலையம் அருகே 58 பெட்டிகள் உடைய சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. கயா - கொடெர்மா இடையிலான ரயில் பாதையில் இந்த ரயில், திடீரென தடம் புரண்டது. இதில் 53 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு வெளியே புரண்டன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயிலின் லோகோ பைலட் உள்ளிட்ட ஊழியர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த கயா ரயில் நிலைய உயர் அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்பட ரயில்வே அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக கயா ரயில் நிலைய மேலாளர் உமேஷ் குமார் கூறுகையில், “பழுதான பாதையை சீரமைக்கும் பணிகள் ரயில்வே குழுவினரால் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்புதான், இவ்வழியே ரயில்களின் இயக்கம் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது; பல பயணிகள் ரயில்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details