தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Golden Globes 2023:"நாட்டு நாட்டு" அனுபவம் ஒரு அழகான சித்ரவதை: ராம் சரண் - ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருது

Golden Globes 2023: 'கோல்டன் குளோப்ஸ் 2023இல் நாட்டு நாட்டு ஒரு அழகான சித்ரவதை; இன்னும் என் கால்கள் அதைப் பற்றியே பேசுகின்றன, RRR இயக்கநர் SS ராஜமௌலி ஒரு சிறந்த ரிங்மாஸ்டர்' என நடிகர் ராம் சரண் கூறினார்.

Golden Globes 2023:"நாட்டு நாட்டு" அனுபவம் ஒரு அழகான சித்திரவதை: ராம் சரண்
Golden Globes 2023:"நாட்டு நாட்டு" அனுபவம் ஒரு அழகான சித்திரவதை: ராம் சரண்

By

Published : Jan 11, 2023, 3:14 PM IST

Golden Globes 2023: லாஸ் ஏஞ்சல்ஸ்:ஆர்ஆர்ஆர் (RRR) படக்குழுவுடன் கோல்டன் குளோப்ஸ் 2023-ல் கலந்து கொண்ட நடிகர் ராம் சரண், "நாட்டு நாட்டு" பயணத்தை எப்படி திரும்பி பார்க்கிறேன் என மனம் திறந்து கூறினார்.

அதில், 'நாட்டு நாட்டு பாடலில் பணிபுரிந்தது "beautiful torture". இந்தப் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் வெற்றி வரலாறு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரின் ஒத்திசைவில் கிடைத்தது. ஆனால், ரிங்மாஸ்டர் ராஜமௌலி பற்றிய கருத்து மட்டும் அப்படியே உள்ளது’ எனக் கூறினார்.

நீங்கள் ஒரு மார்வெல் சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு: ராம் சரண், "நிச்சயமாக. ஏன் முடியாது?" என்றார். மேலும் அவருக்குப் பிடித்த மார்வெல் சூப்பர் ஹீரோவைப் பற்றி கேட்டபோது, அவர் அதிகம் யோசிக்காமல் "டோனி ஸ்டார்க்", அயர்ன் மேன் உரிமையில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது ஒருவேளை ''கேப்டன் அமெரிக்கா'' என இருவரையும் குறிப்பிட்டார். "இந்தியாவிலும் சில அற்புதமான சூப்பர் ஹீரோக்கள் நிறைய உள்ளனர்" என்று அவர் சுட்டிக்காட்டினார். "எங்கள் ஹீரோக்களில் ஒருவரை இங்கே எப்படி அழைப்பது?" எனக் கேட்டார்.

நாட்டு நாட்டு பாடலைப் பற்றி கேட்கும் போது, "என் முழங்கால்கள் இன்றும் அதைப் பற்றியே பேசுகின்றன. இது ஒரு அழகான சித்ரவதை (beautiful torture). அது எங்கிருந்து வந்தது பாருங்கள்'' எனக் கூறினார். RRR இயக்குநர் S.S. ராஜமௌலி அவர்கள் பயங்கர ஆக்‌ஷன் காட்சிகளின் போது கடுமையாக இருந்தாரா? என்ற கேள்விக்கு ராஜமௌலி கூறியது: "நான் அவர்களை குழந்தைகளைப் போல கவனித்துக்கொண்டேன், யாருக்கும் காயம் கூட ஏற்படவில்லை" என்றார். அதற்கு ராம் சரண்: ''அவர் குழந்தைகளையும் அடித்தார்'' என விளையாட்டாகக் கூறினார்.

விருதுகளுக்கு முன்னதாக RRRக்கு கிடைத்துள்ள நேர்மறையான பதிலைப் பற்றி, "பலரின் அன்பைப் பெறுவது என்னை அடிபணியவைக்கிறது'' என ராஜமௌலி கூறினார். ஜூனியர் NTR கூறுகையில் "எங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும் என நாங்கள் நினைத்தோம், ஆனால், அது வெற்றியை விட அதிகமாக மாறியுள்ளது. இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்.

மேலும் இதுகுறித்து ஜூனியர் NTR தனது ட்விட்டர் பக்கத்தில் , "உங்கள் தகுதியான #கோல்டன் குளோப்ஸ் விருதுக்கு வாழ்த்துகள் ஸ்ரீஜி. நான் என் வாழ்க்கையில் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். ஆனால் #NaatuNaatu என்றென்றும் என் இதயத்தில் இருக்கும்" என அவர் ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிங்க: வாரிசு பார்த்துவிட்டு கண் கலங்கிய தமன்.. அரவணைத்த இயக்குநர் வம்சி..

ABOUT THE AUTHOR

...view details