தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: மத்திய அரசு நிறுவன அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு! - ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையினர் மீது கேரள குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு போட்டிக்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.

Gold smuggling case Kerala Gold smuggling case Crime branch registers case against ED Case registered against ED கேரள தங்கக் கடத்தல் அமலாக்கத்துறை ஸ்வப்னா சுரேஷ் சந்தீப் நாயர்
Gold smuggling case Kerala Gold smuggling case Crime branch registers case against ED Case registered against ED கேரள தங்கக் கடத்தல் அமலாக்கத்துறை ஸ்வப்னா சுரேஷ் சந்தீப் நாயர்

By

Published : Mar 19, 2021, 3:22 PM IST

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் உரையாடலில் கசிந்த தகவல்களின் அடிப்படையில் கேரள குற்றப்பிரிவு அலுவலர்கள் அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை குற்றப்பிரிவு அலுவலர்கள் எர்ணாகுளம் முதல்வகுப்பு நீதித்துறை நடுவரிடம் சமர்ப்பித்தனர். அந்த முதல் தகவல் அறிக்கையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு தலைமை வழக்குரைஞரிடம் (ஏஜி) சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அனைத்து சட்ட நடைமுறைகளும் ஆராய்ந்த பின்னர் வழக்குப்பதிவு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவை ஆளும் தரப்பு மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்துவருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு நிறுவன அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கல்வி அமைச்சரை எதிர்கொள்ள நடிகையை நிறுத்திய பாஜக!

ABOUT THE AUTHOR

...view details