இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவாவில் குறையாத கரோனா... சுற்றுலா தலம் திறப்புக்குக் காத்திருக்கும் மக்கள்!
கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், சுற்றுலா தலத்திற்குப் பெயர் போன கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தடை இன்னமும் நீடிக்கிறது. கோவாவில் 100 விழுக்காடு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய பிறகுதான் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் கரோனா தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 585ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உள்ளது. அங்கு ஜூலை 12 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது