கோவா: இந்தியாவின் புகழ்பெற்ற புலனாய்வு இதழான தெகல்காவின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது உடன் பணிபுரிந்த இளம்பெண் 2013ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்.
தருண் தேஜ்பால் தன்னை கோவாவின் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை வடக்கு கோவா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பினை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஷாமா ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்ததற்கான காரணத்தை நீதிபதி தெரிவிக்கைவில்லை என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டு; ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு