கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், வழக்கு ஒன்றில் குறுக்கு விசாரணை நடத்த புதன்கிழமை (மே4) கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து வழக்கின் விசாரணையை முடித்துக்கொண்டு நீதிமன்றத்தின் 'பி' வாசல் வழியாக வெளியேறினார். அப்போது அவரை சக வழக்குரைஞர்கள் சூழ்ந்து கொண்டு Go back Chidambaram (கோ பேக் சிதம்பரம்) என கோஷமிட்டனர். இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை மற்ற வழக்குரைஞர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரத்துக்கு எதிராக Go back Chidambaram எனக் கூறியவர்கள் வழக்குரைஞர்கள் கவுஸ்தவ் பாக்சி மற்றும் சுமித்ரா நியோகி ஆகியோர் எனத் தெரியவந்தது.