உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை உடைந்ததால் தெளளிகங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் அருகில் நடைபெற்ற மின் திட்டமும் சேதமடைந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு காட்சி முதற்கட்டமாக, இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணியில் விமானப்படையை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, நிலைமையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.
உத்தரகண்டில் கடும் வெள்ளப்பெருக்கு மேலும், டெல்லியிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் படையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக கங்கை நதிக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.