தலைமை ஆசிரியரை கட்டி வைத்து ரவுண்டு கட்டிய மாணவிகள்.. நடந்தது என்ன? கர்நாடகா:மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணா அருகே இருக்கும் கட்டேரி கிராமத்தில் தனியார் ப்ரீ கல்லூரி(மேனிலைப்பள்ளி) இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இங்குள்ள விடுதியில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
மேலும் தலைமை ஆசிரியர் சின்மயானந்தா மூர்த்தி என்பவர், விடுதி அருகே உள்ள ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தலைமை ஆசிரியர் சின்மயானந்தா மூர்த்தி, நேற்று (டிச.14) இரவு மாணவிகளின் விடுதிக்குள் வந்துள்ளார்.
அப்போது விடுதியில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை உணர்ந்த மாணவி உடனடியாக தனது வகுப்புத் தோழிக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து விடுதியில் இருந்த மாணவிகள் அனைவரும் ஒன்று கூடி, தலைமை ஆசிரியர் சின்மயானந்தா மூர்த்தியை சுற்றி வளைத்தனர்.
மேலும் ஆசிரியரை வெளியே தப்பிச்செல்ல விடாமல், விடுதியில் கட்டி வைத்து கட்டைகளால் தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர்.எஸ் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் சின்மயானந்தா மூர்த்தியை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பிறந்தநாள் விழாவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு