தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை! - Hyderabad Sexually abuse child

ஹைதராபாத்தில் காரில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் காரில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை!
ஹைதராபாத்தில் காரில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை!

By

Published : Jun 7, 2022, 8:52 AM IST

ஹைதராபாத்: மல்லேப்பள்ளி, விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் சுரேஷ் (23) எனபவர் வேலை பார்த்து வந்தார். இவருடன் ஆதரவற்ற நிலையில், விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வரும் 17 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் தன்னை முழுவதும் நம்ப வைப்பதற்காக மொபைல் போன் உள்ளிட்டவற்றை சிறுமிக்கு சுரேஷ் பரிசாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் சிறுமி கூறியுள்ளார். ஆனால், நெக்லஸ் சாலையில் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற சிறுமி, அங்கு சுரேஷையும் அழைத்து வந்துள்ளார். அப்போது, பேசுவதாகக் கூறி ஓரமாக அழைத்து வந்த சுரேஷ், சிறுமியை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி கடந்த ஜூன் 4 ஆம் தேதி ராம் கோபால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில், சுரேஷை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ மகன் கைது?

ABOUT THE AUTHOR

...view details