தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு - டெல்லி கொலை

டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Dabri girl murdered  Dabri girl murdered her private parts burnt  Dabri girl private parts burnt  Delhi Dabri area girl murdered  பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு  டெல்லியில் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு  டெல்லி கொலை  பெண் கொலை
பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு

By

Published : Nov 16, 2021, 6:23 PM IST

டெல்லி:டெல்லியின் தாப்ரி காவல் நிலையப் பகுதியில், செக்டார் 2, CNG பம்ப் அருகே உள்ள வடிகால் பகுதியில், சுமார் 20 வயதுடைய பெண்ணின் சிதைந்த உடல் நேற்று (நவ.15) மாலை கண்டெடுக்கப்பட்டது.

பெண்ணின் உடல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது முகம் எரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் சில பகுதியும் தீயில் கருகியுள்ளது. ஆகையால் பெண்ணின் அடையாளம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தடயவியல் அலுவகர்கள் சென்று விசாரணையைத் தொடங்கத் தேவையான ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறனர். மேலும் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் தகவல்களை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ

ABOUT THE AUTHOR

...view details