கடந்த மார்ச் 17 ஆம் தேதி, பெங்களூருவிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்குச் சென்ற இண்டிகோ விமானத்திலிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, செய்வதறியாமல் திகைத்த அப்பெண்ணுக்கு, விமானத்திலிருந்த மருத்துவர் சுபகானா நசீர், கேபின் குழு ஊழியர்களின் உதவியோடு பிரசவம் பார்த்தார். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, ஜெய்ப்பூர் விமான நிலைய அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தையும் தற்போது நலமுடன் உள்ள நிலையில், விமானத்தில் பிறந்த இக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதில் தம்பதியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.