தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சகோதரியின் மகளை கொலை செய்த 15 வயது சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! - கொலை செய்த சிறுமி

ஜெய்ப்பூரில் 15 வயது சிறுமி, தனது சகோதரியின் மகளை தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl
Girl

By

Published : Aug 1, 2022, 8:58 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை தனது வீட்டில் மாதா பூஜை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஆக்ரோஷமாகி வீட்டிலிருந்த வாளை எடுத்து அங்கிருந்த தனது குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.

அப்போது, தனது சகோதரியின் 9 வயது மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த சிறுமி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும், பூஜைக்காகவே வீட்டிற்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக சிறுமியின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததாகவும், எதுவும் சாப்பிடாமல் விநோதமாக நடந்து கொண்டாள் என்றும் பெற்றோர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தூங்கவிடாமல் தொந்தரவு: நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details