மகாராஸ்டிரா:துலே மாவட்டம் ஷிந்த்கேடா தாலுகாவில் உள்ள சௌகா என்னும் பகுதியில் ஒரு வயது குழந்தை, தொட்டிலில் இருந்து கீழே சூடான தேநீர் பானைக்குள் விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைக்கு உடல் வெந்து பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக குழந்தையை மீட்டு துலேயிலுள்ள பௌசாஹேப் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.