மொத்தம் 150 வார்டுகளை உள்ளடக்கிய ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நேற்று (டிச. 01) நடைபெற்றது. இத்தேர்தலில் 149 வார்டுகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
சில அரசியல் கட்சிகள் சின்னம் தொடர்பான குழப்பத்தால் பழைய மாலக்பேட் வார்டில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 149 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 46.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2016 ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு 1.31 விழுக்காடு வாக்குகள் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை 45.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாகத் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், 46.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக இன்று (டிச. 02) காலைஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பெருநகர ஹைதராபாத் தேர்தலின்போது பதிவான வாக்குப்பதிவு விழுக்காடு வருமாறு:
- 2002- 43.27%
- 2009- 42.04%
- 2016 -45.29%