தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தடுப்பூசி: வயது கட்டுப்பாடை நீக்க ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை - அசோக் கெலாட் கோவிட்-19 தடுப்பூசி

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடை நீக்க ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

By

Published : Mar 23, 2021, 4:39 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்கள், 45 வயதைக் கடந்த இணை நோயாளிகளுக்கு தற்போது கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

கடந்த ஒரு வார காலமாக நாட்டில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், தடுப்பூசி செலுத்துவதை இன்னும் தீவிரப்படுத்த பலரும் வலியுறுத்திவருகின்றனர். குறிப்பாக இந்த வயதுக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை கவனமாக செயல்படுத்தப்பட வேண்டும். எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வயது கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

குறிப்பாக 24-45 வயதினர் மூலமாகத்தான் பரவல் அதிகம் காணப்படுகிறது. எனவே, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அசோக் கெலாட் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details