தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 7:47 PM IST

ETV Bharat / bharat

கரோனா முன்னெச்சரிக்கை: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

கரோனா முன்னெச்சரிக்கை: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட கம்பீர்
கரோனா முன்னெச்சரிக்கை: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட கம்பீர்

அனைவரும் பாதுகாப்பாக இருக்க தேவையான கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக்கொண்டார். தனது குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள கம்பீர், கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "வீட்டில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனது கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறேன். கரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுங்கள், இதை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 47 ஆயிரத்து 638 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 54 ஆயிரத்து 157 பேர் 24 மணி நேரத்தில் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 65 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

நவம்பர் 5 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11 கோடிய 54 லட்சத்து 29 ஆயிரத்து 95 கரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details