தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தில் விமானி மரணம்: விமானப் படையில் இணைந்த மனைவி - கரிமா அப்ரால் விமானப் படையில் இணைந்தார்

விமான விபத்தில் உயிரிழந்த விமான படை விமானி சமீர் அப்ராலின் மனைவி கரிமா அப்ரால், விமானப் படை அகாதமியில் பயிற்சியை முடித்து இந்திய விமானப் படையில் சேர்ந்துள்ளார்.

சமீர் அப்ராலின் மனைவி கரிமா அப்ரால்
சமீர் அப்ராலின் மனைவி கரிமா அப்ரால்

By

Published : Dec 21, 2020, 1:16 PM IST

Updated : Dec 21, 2020, 4:51 PM IST

டெல்லி: 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படையின் மிரேஜ் 2000 எனும் போர் விமானம் சோதனையின்போது விபத்துக்குள்ளானது.

அப்போது விமானத்திலிருந்து தப்பிக்க முயன்ற விமானிகள் சமீர் அப்ரால், சித்தார்த்தா நேகி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து, சமீரின் மனைவி கரிமா அப்ரால், கடந்த ஆண்டு நடைபெற்ற விமானிகளுக்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று விமானப் படை அகாதமியில் இணைந்தார். இந்நிலையில், தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கரிமா, இந்திய விமானப் படையில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய விமானப்படை தினம்: போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சி!

Last Updated : Dec 21, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details