தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கைது! - Sidhu Moosewala

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கைது!
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் கைது!

By

Published : Dec 2, 2022, 9:29 AM IST

சண்டிகர் (பஞ்சாப்):பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, கடந்த மே 29 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கேங்க்ஸ்டர் கோல்டி பிரார் ( Goldie Brar) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், கலிபோர்னியா காவல்துறையால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்த தகவல் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கோல்டி பிராருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இருந்து கோல்டி பிரார் கலிபோர்னியாவுக்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சித்து மூஸ்வாலா கொலை வழக்கு - கேங்ஸ்டர் தீபக் தினு போலீஸ் காவலில் இருந்து தப்பியதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details