தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலி நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது.. - அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

17வது ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாலி சென்ற பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாக வரவேற்பு அளித்தார்.

பாலியில் ஜி20 மாநாடு தொடங்கியது
பாலியில் ஜி20 மாநாடு தொடங்கியது

By

Published : Nov 15, 2022, 9:18 AM IST

17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாலி சென்றார். அவருக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாக வரவேற்பு அளித்தார். அவர் பாலியில் உள்ள அபூர்வா கெம்பிசங்கி ஹோட்டலில் தங்கியுள்ளார். ஜி-20 மாநாட்டில் இருந்து மற்ற உலகத் தலைவர்களுடனான இருதரப்பு சந்திப்புகளில் பிரதமர் பங்கேற்பார்.

இரண்டு நாள் ஜி-20 உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலகின் 20 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற சவால்கள், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பாலியில் ஜி-20 குழுவின் தலைவர்களுடன் விரிவான விவாதங்களை நடத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாலிக்கு செல்வதற்கு முன், பிரதமர் ஒரு அறிக்கையில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்வதில் அதன் 'வலுவான ஈடுபாட்டை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறினார்.

பாலிக்கு செல்வதற்கு முன், பிரதமர் மோடி, 'பாலி உச்சிமாநாட்டின் போது, ​​உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற உலகளாவிய அக்கறையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி 20 தலைவர்களுடன் விரிவான விவாதம் நடத்துவேன்' என தெரிவித்தார்.

மேலும் 'உச்சிமாநாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, ​​இந்தியாவின் சாதனைகள் மற்றும் உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான உறுதியான உறுதிப்பாட்டை எடுத்துரைப்பேன்' என்று பிரதமர் கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் பிடன், பிரிட்டன் பிரதமர் சுனாக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரும் உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து அவர்களுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க:வகுப்பறையில் காவி வண்ணம்: கர்நாடக முதலமைச்சர் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details