ஹைதராபாத்: ஜி20 அமைப்பில் இடம் பெற்று உள்ள நாடுகள், சர்வதேச அளவில் 85 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 75 சதவீத அளவிலான சர்வதேச வர்த்தகத்தையும், மொத்த மக்கள்தொகையில், மூன்றில் இரண்டு பங்கு அளவிலான மக்கள்தொகையயும் தன்னகத்தே கொண்டு உள்ளன.
ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் இன்று (செப். 9) துவங்கி நாளை (செப். 10) வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
சர்வதேச அளவில் இந்தியாவை காட்சிப்படுத்த சிறந்த வாய்ப்பு :தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவை, சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் IGIDR அமைப்பின் முன்னாள் துணைவேந்தரும், இந்திய அரசின் CACP அமைப்பின் முன்னாள் தலைவருமான எஸ். மகேந்திர தேவ் தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கிடியேயான போர் உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் அடிப்படையில் உலகின் முக்கிய நாடுகளிடையே பிளவுகள் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்த மாநாட்டில் இருந்து விலகி இருப்பது, இந்த பிளவை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இத்தகைய புவிசார் பிரச்சினைகளுக்கு இடையேயும், இந்த ஜி20 மாநாடு, இந்தியா தனது சாதனைகளை வெளிப்படுத்தி, உலகின் தெற்கு குரலாக ஒலிப்பதற்கான வாய்ப்பாக, இது அமைந்து உள்ளது.
பல்துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு என்ன :இந்த ஜி 20 உச்சி மாநாட்டிற்காக, நாடு முழுவதிலும் உள்ள 29 மாநிலங்களில் கடந்த 8 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக, பசுமை மேம்பாடு, பருவநிலை, நிதி, தொழில்நுட்ப மாறுபாடுகள், 21ஆம் நூற்றாண்டில் டிஜிட்டல் பொது கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி உள்ளிட்டவைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஜி 20 நாடுகளில், ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பதும், முக்கிய அம்சமாக உள்ளது.
பசுமை வளர்ச்சியில் பேரிடர் அபாயங்களைக் குறைத்தல், பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாற்று எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள் மற்றும் போதாதுமான காலநிலை நிதி திரட்டுதல் உள்ளிட்டவைகளில் இந்தியா பரந்த அளவிலான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் துறையில் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா :இந்தியாவின் முன்னுரிமைக்கு ஏற்ப நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான 2023 செயல் திட்டத்தை வளர்ச்சி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு உள்ளது, இது நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முன்னுரிமைகள் அனைத்திற்கும் வழி வகுக்கும் வகையில் உள்ளது.