கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன்(68), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(அக்.1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இன்று (அக். 2) சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், உடல் கண்ணூர் சென்றடைந்ததும், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தலச்சேரி டவுன்ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராஜன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு நாளை(அக்.2) கண்ணூரில் உள்ள பையாம்பலம் கடற்கரையில் நடைபெறும் என தெரிவித்தார்.