ஹைதராபாத்:2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படங்களுக்கான விருது, தமிழ் படத்திற்கான விருதை 'கடைசி விவசாயி' படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த பெண் பாடகருக்கான விருது, "இரவின் நிழல்" படத்தின் மாயவா சாயவா படலுக்காக பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு (Shreya Ghoshal) அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விருது பெறும் படங்களில் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரம்மாண்ட திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய RRR படம், சிறந்த முழு நேர பொழுதுபோக்கு படத்திறகான விருது, சிறந்த கிராஃபிக்ஸ்கான விருது, சிறந்த நடனத்திற்கான விருது, சிறந்த பின்னணி இசைக்கான விருது உட்பட ஆறு விருதுகளை குவித்துள்ளது.
தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு (Allu Arjun) அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் கமல் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறந்த இசைக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றுள்ளர். குறிப்பாக இந்த விருதை RRR இசையமைப்பாளர் கீரவாணியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு, (Alia Bhatt) 'கங்குபாய் கத்யாவாடி' (Gangubai Kathiawadi) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்க்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும், சிறந்த வசனங்களுக்கான விருதும் மற்றும் சிறந்த ஒப்பனை அலங்காரத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.