டெல்லி: இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நேரத்தில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மார்ச் 22இல் இருந்து தொடர்ந்து 16 நாள்களில் விலை உயர்ந்துவந்த நிலையில், ஏப். 7ஆம் தேதி முதல் தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏற்றத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எரிப்பொருள்களின் விலையேற்றம் குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடன் காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவர் (பொறுப்பு) நெட்டா டி'சோசா நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் விமானத்தில் டெல்லியில் இருந்து கௌகாத்தி வரை செல்ல நேர்ந்தது.