தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Election Results 2022: ஐந்து மாநிலங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், ஐந்து மாநிலங்களின் தொகுதிகள், நட்சத்திர வேட்பாளர்கள், சாதகம், பாதகம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்தக் கட்டுரையில் காணலாம்.

from-goa-to-up-manipur-all-you-need-to-know-about-five-states-ahead-of-election-results
from-goa-to-up-manipur-all-you-need-to-know-about-five-states-ahead-of-election-results

By

Published : Mar 10, 2022, 8:12 AM IST

Updated : Mar 10, 2022, 8:48 AM IST

டெல்லி:உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகியது. பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளன. உத்தரகாண்டில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளன.

  1. பஞ்சாப்:

பஞ்சாபில் பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 93 பெண்கள் உள்பட 1,304 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்கள் 1,02,00,996 பெண்கள் உள்பட 2,14,99,804 பேர். 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. 2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றி சிரோன்மணி அகாலி தளம்-பாஜக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.

அதேபோல பாஜக 18 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களையும் பெற்றது. இந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் நேரடி பரப்புரையின் எதிரொலியாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் விதாமாக உள்ளன. பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் முதலமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். முன்னாள் முதலமைச்சரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் பட்டியாலா தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் தூரி தொகுதியில் போட்டியிட்டார்.

2.உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் வாக்காளர்கள் 15,02,84,005 பேர். மொத்த வேட்பாளர்கள் 4,442 பேர். 57.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன. 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 312 இடங்களில் வெற்றியை பதிவு செய்து ஆட்டியை பிடித்தது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வென்றது.

  • முக்கிய வேட்பாளர்கள்

பாஜக வேட்பாளரும் முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புறம் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டார். பாஜகவின் கேசவ் பிரசாத் மௌரியா சிரத்து தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி கட்டியின் சுவாமி பிரசாத் மௌரியா ஃபாசில்நகர் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி-வினய் சங்கர் திவாரி சில்லுபார் தொகுதி போட்டியிட்டார். பாஜக-அனில் ராஜ்பார் ஷிவ்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி-அப்துல்லா ஆசம் கான் சுயர் தொகுதியில் போட்டியிட்டார்.

3. உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதி நடந்தது. மொத்தம் 70 தொகுதிகள். 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள். 81 லட்சம் வாக்காளர்கள். 65.4% வாக்குகள் பதிவாகின. ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்கள் தேவை. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜக மொத்தம் உள்ள 70 இடங்கில் 57 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தல் பரப்புரையில், காங்கிரஸ் கட்சி பொது விவகாரங்களையும், பாஜக வழக்கமான இந்துத்துவா, தேசியவாதத்தின் கருப்பொருளையும் அடிப்படையாக கொண்டிருந்தன.

  • முக்கிய வேட்பாளர்கள்

ஆளும் பாஜக-முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர்சிங் தாமி (காதிமா தொகுதி). பாஜக-கவுசிக்(ஹரித்வார் தொகுதி). உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியாலை எதிர்த்து பாஜகவின் தன் சிங் ராவத் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

கோவா:

கோவாவில் உள்ள 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11.65 லட்சம் வாக்களார்கள். 78.94% வாக்குகள் பதிவாகின. பாஜக- காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, கோவா ஃபார்வர்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து கோவாவில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.

2017ஆம் ஆண்டு காங்கிரஸ் 17 இடங்களில் வென்றது. அதே நேரத்தில் பாஜக 13 இடங்களைப் பெற்றது. ஆனால் பாஜக சுயேட்சை வேட்பாளர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் இல்லாமல் பாஜக சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். அவரது மகன் உத்பல் பாரிக்கர் சுயேட்சையாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்:

மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 22 தொகுதிகளுக்கும் நடந்தது. 265 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 8.38 லட்சம் வாக்காளர்கள். 76.62% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான என் பிரேன் சிங், சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கேம்சந்த் சிங், துணை முதலமைச்சரும் நாகா பீப்பிள் ப்ரோன்ட் வேட்பாளருமான யும்னம் ஜாய்குமார், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக மணிப்பூர் தேர்தல் முடிவுகள் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை

ஐந்து மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 50,000 அலுவலர்கள் எண்ணுகின்றனர். அதிகபட்சமாக 403 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 750க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையடுத்து பஞ்சாபில் 200-க்கும் மேற்பட்டவாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க:தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்...

Last Updated : Mar 10, 2022, 8:48 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details