ஹைதராபாத்: டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் விருந்தினர்களை அழைப்பதற்கான குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ நாளிதழலில் ‘பாரதத்தின் குடியரசுத் தலைவர்’ (The President of Bharat) என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ‘இந்தியா’ (India) என்பதை ’பாரத்’ (Bharat) என மாற்றுவதற்கான ஆயத்தப் புள்ளி எனவும், எதிர்கட்சிகளின் INDIA கூட்டணியின் பெயரை மத்திய பாஜக அரசு பயன்படுத்த விரும்பாத காரணம் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளும், ஆதரவும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை புதிதாக திறக்கப்பட்டு உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டது. எனவே, இந்த சிறப்பு கூட்டத்தொடரில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஈடிவி பாரத் செய்திகளுக்கு தகவல் அளித்து உள்ளன.
முன்னதாக, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள ஜி20 விருந்திற்காக அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத்தின் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த செய்தி உண்மைதான்.