தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

Nepal Earthquake felt across Delhi: நேபாளத்தின் மேற்கு பகுதியில் இன்று (நவ.6) மாலை 4.16 மணிக்கு 5.6 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை டெல்லியில் பல இடங்களில் உணர முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fresh-earthquake-hits-nepal-tremors-felt-across-delhi-ncr
டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

By ANI

Published : Nov 6, 2023, 9:00 PM IST

டெல்லி:நேபாளத்தின் மேற்கு பகுதியில் இன்று (நவ.6) மாலை 4.16 மணிக்கு 5.6 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரப்பிரதேச மாநிலம் வடக்கு அயோத்தியிலிருந்து 233 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பல இடங்களில் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் போது பல வீடுகள் அலுவலகங்கள் உட்படப் பல இடங்களில் பொருட்கள் குலுங்கியது போன்ற காட்சிகளைப் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் டெல்லியிலுள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நேற்று (நவ.5) மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மாலை 5.42 மணிக்கு 3.1 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது X பக்கத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் அண்டு 6.4 என்ற ரிகடர் அளவிலான நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியதில் 157 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 பேர் காயமடைந்தனர் மேலும் பலர் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். நேபாளத்தில் மிகவும் பரபரப்பான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த பருவமழை..! ஆனாலும் இயல்பை விடக் குறைவு; வானிலை ஆய்வு மையம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details