தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றுமுதல் திருமலையில் இலவச தரிசனம் ரத்து - Cancel free darshan in Tirupati

கரோனா பரவல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்கும்விதமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

By

Published : Apr 12, 2021, 8:47 AM IST

கரோனா பரவல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் (ஏப். 12) இலவச தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன சீட்டுகளுக்கு நேற்று இரவு முதலே தேவஸ்தானம் தடைவிதித்தது.

இலவச தரிசன சீட்டுகளை வாங்குவதற்காகப் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் கூடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் இலவச தரிசன சீட்டுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு, கரோனா பரவல் குறைந்தபின் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 11ஆம் தேதிமுதல் கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து அக்டோபர் 27ஆம் தேதி இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இலவச தரிசனம் இன்று முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் தரிசன சீட்டு 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details